/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/75_20.jpg)
இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில், கடந்த ஆண்டு வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின்அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)